ஆணை விட பெண்ணும், பெண்ணை விட ஆணும் உயர்ந்தவர் அல்லர், தாழ்ந்தவரும் அல்லர்!....
ஆணும் பெண்ணும் சமம் அல்ல....
பெண் ஒரு சிறப்பு..
ஆணும் ஒரு சிறப்பு...
சாதாரண மொழில சொன்னா,
தேன் துளிக்கும், இளநீருக்கும் இருக்கும் சிறப்பு அம்சங்களும் ஆணிடமும் இருக்கு, பெண்ணிடமும் இருக்கு.
இதை புரிஞ்சுக்காம, மகளிர் முன்னேற்றக் குழு, பெண்கள் சுய உதவிக்குழு... இதர பல அமைப்புகள் தேவையே இல்லாம ஆணும் பெண்ணும் சமம்-ன்னு விவாதம் பண்றதை பார்த்தால், எனக்கு சிரிப்புதான் வருது.
சமுதாயத்தில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு...
ஆனால், அந்த பிரச்சனைக்கு மூல காரணம் என்னவென்று, பிரச்சனையின் வேர் எங்கு உள்ளது என்று கண்டு அதனைக் களைய வேண்டும். இல்லையேல் பிரச்சனை தவளைக்ளைப் போல் மீண்டும் தோன்றும்...
சமீப காலங்களில் நடந்த பாலியில் வன்புணர்வு நிகழ்ச்சிகள், பல கோடி நெஞ்சங்களை பாதித்தது. இன்னும், எங்கோ ஒரு மூலையில் அசம்பாவிதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன...
பாதிக்கப் பட்டவரின் நண்பர்களும், உறவினர்களும், நீதி கோரி போராட்டத்தில் இறங்குகின்றனர்...
தனி நபரோ, அல்லது கும்பலோ தவறிளைத்தவர்கள் தண்டனைக்குரியவர்கள்.... அதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால் பெருகி வரும் பாலியல் வன்புணர்வுகளுக்கு மூல காரணம்தான் என்னவென்று ஆராய எவரும் இல்லை.. யாருக்கும் நேரமும் இல்லை.
ஏதோ என் மனதில் தோன்றியதை இங்கே முன் வைக்கின்றேன்... முடிந்தால் ஏற்கவும். இல்லையேல், தங்கள் பணியினை தொடரலாம்... விவாதம் செய்ய நான் தயாராக இல்லை.
ஊடகம்:
"..நீரோடும் வைகையிலே... நின்றாடும் மீனே.."...பாடலில் நடிகர் திலகம் அவர்கள் புகை பிடித்துக் கொண்டே தொட்டிலை ஆட்டுவார்...
திரை உலகம் தோன்றிய காலம் முதல் சராசரி மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுக்கும் திரையில் வரும் கதா பாத்திரங்கள் முக்கிய காரணம் வகிக்கின்றன.
சினேகா சேலை, நயன்தார சேலை, விஜய் சட்டை, அஜீத் பேன்ட், என்ன நீங்க இவ்வளோ சின்னதா கழுத்து வச்சி துணி போடுறீங்க? இப்போ இது எல்லாம் பாஷீன் கிடையாது... நல்லா டிரெண்டா டிரஸ் பண்ணுடா.. -என்ற வசனங்களும், அறிவுரைகளும் திரையில் இருந்து மக்களின் மூளைக்கு விரைவில் பயணிக்கின்றன.
சின்னத்திரையாகட்டும் பெரியத் திரை ஆகட்டும்...எந்த ஒரு கண்டுபிடிப்பிலும் உள்ள பின்விளைவுகளுக்கு விதி விளக்கு அல்ல.
.."நாங்க ஒன்னும் இல்லாதது எதையும் காட்டுல... நாட்டுல என்ன நடக்குதோ, அதையேதான் நாங்க படத்துல காட்டுறோம்"...-ன்னு ஒண்ணுமே தெரியாத மாதிரி பேட்டி கொடுக்கிற திரையுலக படைப்பாளிகளை நினைத்து சிரிப்பதா அழுவதா-ன்னே எனக்கு தெரியல..
நான் ஒரு வாகனத்தை அறிமுகப் படுத்த வேண்டுமா?
நான் ஒரு நிறுவனத்தை அறிமுகப் படுத்த வேண்டுமா?
நான் ஒரு புதிய பொருளை அறிமுகப் படுத்த வேண்டுமா?
நான் ஒரு படம் எடுத்து சம்பாதிக்க வேண்டுமா?
நான் எந்த ஒரு தொழில் தொடங்க வேண்டுமானாலும், எனக்கு என்னை விளம்பரம் செய்ய ஒரு பெண் வேண்டும். நவ நாகரீக யுவதி வேண்டும்... அவள் கண்ணில் அனைவரும் சொக்க வேண்டும்...
உலகத்தை திரும்பி பார்க்க வைக்க பெண்ணால் மட்டுமே முடியும்.
அவளை நம்பியே அனைத்து தொலைகாட்சி நிறுவனங்களும் உள்ளன. ஊடகங்களும், ஊடகம் சார்ந்த தொழில் நிறுவனங்களும், கவர்ச்சியை நம்பியே இருக்கின்றன. இதுவும் ஒரு வகையில் விபச்சாரமே..
சரி பிரச்சனைய சொல்லியாச்சு.. அதுக்கு என்ன தீர்வு?
1.ஊடகத்திற்கான சட்டதிட்டங்கள் கடுமையாக்க வேண்டும்.
2. பெண்ணை தரக் குறைவாக, கவர்சிகரமாக சித்தரிக்க தடை செய்ய வேண்டும்.
எரியுறத புடுங்கு... கொதிக்கறது தன்னால அடங்கும்..
பெண்களை கடவுளாக காட்டுங்க..தேவதையாக காட்டுங்க...அப்போதான் சாதாரண மக்களும் பெண்களை கடவுளா மதிப்பாங்க... நீங்க எப்புடி காட்டுறீங்களோ அப்பட்டிதான் மக்கள் பார்ப்பாங்க..
ஒரு வருடத்தில் இந்த மாற்றத்தை கண்கூடக் காணலாம்.
மதம் சார்ந்த நாகரீகம்:
xxxxxx மதம் இந்தியாவிற்கு வரும் வரை நாகரீகம் என்பதே என்ன என்று அறியாத நாடு இந்தியா. என்று ஆரம்பப் பள்ளியில் வரலாற்றுப் பாடம் உள்ளது. (In International School Syllabus).
பழையன கழிதலும்.. புதியன புகுதலும், சமுதாயத்திற்கு நன்மையே...
எனவே, தொண்டு தொற்று வந்த நமது பழைய நாகரீகமான, மனிதர்களை மதிப்பது, பசி என்றவருக்கு உணவளிப்பது... ஜீவகாருண்யம், சக உயிர்களை நேசிப்பது... போன்ற அனைத்து பழக்கங்களையும் கைவிட்டு, குளிக்காமல் உண்பது..மதத்தை பரப்புவதே தலையாய கடமை, நாள் கிழமை சுத்தம் அசுத்தம் என்று பார்க்காமல் இருப்பது.. யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் உறவு வைத்துக்க் கொள்வது.. போன்ற புதிய நாகரீகத்தைக் கடைபிடிப்போமாக. [because God is there to forgive them for all their sins...]
அனைத்து xxxxxx மத பள்ளிகளிலும் xxxxxx மத விளையாட்டுகளுக்கு, பயிலும் அனைத்து மாணவர்களும் கட்டாயப் படுத்தப் படுகின்றனர். பிரார்த்தனை வகுப்புகள், xxxxxx மத மரம், நட்சத்திரம், அலங்காரப் பொருட்கள்.. இன்னும் பல்வேறு அம்சங்கள் பொருந்திய நம்பிக்கையை பிஞ்சு மனதில், xxxxxx மத பள்ளிகள் விதைத்து விடுகின்றன... இதுவும் xxxxxx மத மாற்றத்திற்கு ஓர் தூண்டுகோலே..
பாமரன் ஈர்க்கப் படுகின்றான்...
நீ மிகவும் தாழ்த்தப் பட்டவனா? என் மதத்திற்கு மாறு, உன் ஜாதிச் சான்றிதழ் SC, ST - யில் இருந்து BC-க்கு மாற்றப்படும்..
இல்லை என்று மறுத்தால், மக்கள் எண்ணிக்கை எப்போதுமே குறைவாக உள்ள, ஊட்டி, ஏற்காடு, கோடை, கொல்லி மலை போன்ற மலைப் பிரதேசங்களில், ஆள் அரவம் அற்ற காடுகளில் கூட xxxxxx மத தேவாலயங்கள் தோன்ற காரணம் என்ன என்று கூறுங்கள்?..
இந்திய நாட்டின் கலாச்சார சீரழிவிற்கு மதம் சார்ந்த மாற்றங்களும் ஒரு காரணமே.
நீ ரோமில் இருக்கும்போது ரோமானியனாக இரு...இந்த பழமொழி இந்தியாவில் மட்டும் விதிவிலக்கு... நீ இந்தியாவில் இருக்கும்போது நீ என்னவாக வேண்டுமானாலும் இரு...
பெண்மை:
பெண்ணிடம் கவர்ச்சி உள்ளது. பெண் ஒரு மாபெரும் சக்தி,
பெண் ஆடைக் குறைப்பைப் பற்றி கூறினால், ஆண்களின் கண்களில் காமம் உள்ளது, என்னை உடை மாற்றச் சொல்ல நீ யார்? என்று கேள்விகள் எழுகின்றன...
|
http://amandadandrea.wordpress.com/2013/11/25/dress-codes-slut-shaming-and-the-male-gaze/ |
ஆனால், ஒரு பெண்ணுக்கு நிகழும் வன்புணர்விற்கு காரணம் இன்னொரு பெண்ணே... என்பது என் கருத்து. மதுவின் மயக்கத்தில், போதையில், தான் செய்வதறியாது செய்தவன் ஒரு கருவியே.... அவனை தூண்டியது, அவனுக்கு பெண்ணின் மீது சபலம் ஏற்படுத்தியது இன்னொரு பெண்ணே...
ஆகையால்.. பெண்களாய் பார்த்து திருந்தாவிட்டால், பெண்களுக்கு எதிராக நடக்கும் அசம்பாவிதங்களை குறைக்க, தடுக்க.. எதுவுமே முடியாது.
நான், இந்த காமக் கொடூரர்களின் செயல் குற்றம் அல்ல என்று கூறவில்லை கணம் நீதிபதி அவர்களே, இவர்கள் தண்டனைக்கு உரியவர்களே ... ஆனால் இது போன்ற பெண்ணுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு மூல காரணம் வேறு ஒரு பெண்ணே என்று விளக்க முயற்சிக்கிறேன்.