Monday, May 12, 2014

புதிய தலைமுறைக்கு என் கடிதம்.

ஆசிரியர் மாலன் அவர்களே,
மாறி வரும் சமுதாயத்தில், ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் இயக்கம், உண்மையானவர்.. என்ற நம்பிக்கையில் புதிய தலைமுறையை வாசிக்க ஆரம்பித்தேன்...
நான் எதையும் அதிகமாக எதிர்பார்த்தது இல்லை...
கடைசியில், புதிய தலைமுறையும் ஒரு சாதாரண தொழில் சார் நிறுவனம்தான் என்று என்னை நினைக்க வைத்து விட்டார்கள்...


அடச்சீ அரசியல்-ன்னு ஒரு கவர் ஸ்டோரி போட்டுட்டு, அப்புறம் எதுக்கு கடந்த ரெண்டு மாசமா வெறும் அரசியலாவே எழுதுறீங்க?

பொதுமக்கள் பாதி பேருக்கு யாருக்கு ஒட்டு போடணும்-ன்னு தெரியாது. அவங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி ஏதாவது செஞ்சா அத வரவேற்கலாம்.

எந்த குப்பையை வேண்டுமானாலும் இந்தியாவில் விற்கலாம், ஏனென்றால், இங்கு விளம்பரம் ஒன்று மட்டுமே போதும், மக்கள் அதிகம் யோசிப்பது இல்லை. இப்படிப்பட்ட நாட்டுல இருந்துகிட்டு, அவர் அப்படி சொன்னாரு, இவரு இப்படி சொன்னாரு,  நல்லவரா இல்ல கெட்டவரா.... நூறு வருசத்துக்கு முன்னாடி இது இப்படி நடந்துச்சு.. கடந்த தேர்தல்-ல இப்படி ஆனது.. அதுக்கு முந்தைய தேர்தல்-ல இது இப்படி ஆகல... இந்திரா காந்தி காலகட்டத்துல இருந்து இது நடக்குது...சதா புள்ளி விவரமும், கருத்துக்கணிப்பும், அடச்சீ புதிய தலைமுறை-ன்னு நினைக்க வச்சிடுச்சு...

ஒரு சாமானியனை, யோசிக்க வைத்து, ஓட்டு போடக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு மாதிரி அட்டவணையை கொடுக்க வேண்டும். போட்டியிடும் அணைத்து வேட்பாளர்களுக்கும் தரம் சார் மதிப்பெண் இடும் ஒரு ஆசிரியனாக அந்த சாமானியனை மாற்றுவதே ஒரு இயக்கத்துக்கு அழகு.

கட்சிக்காக, சின்னதிற்காக, கூட்டணிக்காக ஓட்டு போடுபவர்கள் பழைய தலைமுறை... புதிய கோடி தலைமுறை-க்கு நீங்கள் எவ்வாறு ஓட்டு போட வேண்டும் என்று ஏதாவது வழி காட்டி இருக்கிறீர்களா?

பேசுறதுக்கு, எழுதுறதுக்கு, எவ்வளவோ, நல்ல விஷயம் நிறைஞ்சு இருக்குற இந்த உலகத்துல, வெறும் அரசியல் பத்தி எழுதி, உங்க பேர்ல இருக்குற கொஞ்ச நஞ்ச நல்ல பேரையும் கெடுத்துக்க வேண்டாம்.

- நான் என்ன சொன்னாலும், நீங்க யாரும் கேக்கப் போறது இல்ல.. நடத்துங்க... எவ்ளோ தூரம் போறதுன்னு பாக்கலாம்.

No comments:

Post a Comment