Wednesday, March 19, 2014

அப்பாவின் அறிவுரைகள்

அடுத்தவர் மனம் புண்படும் வார்த்தைகளைப் பேசாதே..

அடுத்தவர் பொருளுக்கு ஆசை கொள்ளாதே...

உடற்பயிற்சி செய்... உணவைத் தவிர்க்காதே...

இழப்பிற்காக வருந்தாதே, பணம் ஒரு பொருட்டல்ல... பாடத்தைக் கற்றுக்கொள்!

எல்லோரையும் நம்பாதே... உலகில் நல்லவர்கள் மிக குறைவு!...

பேரழிவின் பிரதிபலிப்பு கடன்-வட்டி, கொடுக்காதே.. வாங்காதே... 

புண்ணியம் தேடு... ஊரோடு ஒத்து வாழ் விதண்டாவாதம் தவிர்.

தர்மத்திற்கு கட்டுப்படு, கண்ணியம் தவறாதே...

வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்... குடும்பம் தழைக்கும்!

பொது வாழ்வில் உதவி செய், உபத்திரம் உருவாகாமல் பார்த்துக்கொள்.

அவுரு இன்னும் என்னென்னமோ சொல்லி இருக்காரு... 

எங்க அப்பா சொன்னபடி கேட்டு நடக்கணும்-ன்னு எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. பட் என்ன பண்றது..? ஊழ்வினை அதோட போக்குலதான் இழுத்துட்டு போவுது. 

No comments:

Post a Comment