ஜிப்ரேல் என்ற இறை தூதர் (நபி), அண்ணல் முகம்மது அவர்களுக்கு கூறிய வேதமே குர்ரான். இறைவன் ஒருவனே என்ற தத்துவம், எளிமையான வாழ்க்கை முறை, நோன்பு, மற்ற உயிர்களிடம் அன்பு காட்டுதல் மற்றும் தினசரி கட்டாயத் தொழுகை.. ஜிப்ரேல் ஒரு நாளுக்கு 52 முறை தொழ சொன்னாராம், ஆனால் நடைமுறை சாத்தியம் கருதி, முகம்மது 5 முறையாகக் குறைத்ததாக ஒரு வரலாறு உள்ளது., [மேலும் விபரங்களுக்கு நிலமெல்லாம் ரத்தம் என்னும் நூலை படிக்கவும்]
அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்தவன் ஈஸ்வரன். தவ யோகத்தை வழிகாட்டுகிறது சைவம். உலக உயிர்கள் அனைத்திற்கும் படியளப்பவர் ஈஸ்வர். ஆரம்பம் மற்றும் முடிவு இல்லாத இறைவன் ஈஸ்வரன்.
நீள அகல உயரம், ஆரம்பம் மற்றும் முடிவு நிலை இல்லாத ஒரே ஒரு உதாரணம் இந்த பிரபஞ்சமே... விண்வெளி, பால்வெளி...காலக்ஸி .. என்று வல்லுனர்களால் பல்வேறு வார்த்தைகளில் விளக்கப் பட்டு வந்த இந்த பிரபஞ்சமே இறைவன் என்ற தத்துவம் சைவத்தில் உள்ளது.
எந்த ஒரு மதமும் உருவான காலத்தில் மிக சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கிறது, ஆனால் காலப் போக்கில் மத குருக்கள், மற்றும் மத அரசியல்வாதிகள் அவர்களின் வசதிக்கேற்ப ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள், ஆதலால், மதத்தின் போக்கு மாறி இருக்கிறது.
மதம் என்பது மக்களின் அபின் - என்று ஒரு மார்க்சீய வாக்கியம் உள்ளது. இதை மறுக்க என்னால் இயலவில்லை.
இன்று இருக்கும் சூழலில் மதமே இல்லாமல் இருப்பது உத்தமம் என்றே தோன்றுகிறது. [நம் ஆதி தமிழர்கள் போல].